சிங்கப்பூர் பூமலையில் பூத்து குலுங்கும் 163 வயது டைகர் ஆர்க்கிட்

சிங்கப்பூர் பூமலையில் பூத்து குலுங்கும் 163 வயது டைகர் ஆர்க்கிட்

1 mins read
3b52f504-c7e2-4aa9-b3fe-ff206a72ac3d
ஒவ்வொரு டைகர் ஆர்க்கிட் மலரும் கிட்டத்தட்ட 10 சென்டிமீட்டர் அகலம் வரை வளரக்கூடும். - படம்:  சிங்கப்பூர் பூமலை

ஆர்க்கிட் தாவரங்களில் ஆகப் பெரியது டைகர் ஆர்க்கிட். அது தற்போது சிங்கப்பூர் பூமலையில் பூத்து குலுங்குகிறது.

இதுகுறித்து சிங்கப்பூர் பூமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி பதிவிட்டது.

“டைகர் ஆர்க்கிட் தெளிவான வண்ண மலர், அது பார்க்க புலியின் தோல் போல் இருக்கும். ஒவ்வொரு டைகர் ஆர்க்கிட் மலரும் கிட்டத்தட்ட 10 சென்டிமீட்டர் அகலம் வரை வளரக்கூடும்,” என்று சிங்கப்பூர் பூமலை குறிப்பிட்டது.

163 வயதான டைகர் ஆர்க்கிட் தங்லின் கோரில் காணலாம்.

சிங்கப்பூரின் ஆக பழைய தாவரம் மற்றும் ஆகப் பெரிய ஆர்க்கிட் வகை டைகர் ஆர்க்கிட் என்று சிங்கப்பூர் பூமலையின் மூத்த இயக்குநர் தியேரிஸ் சூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

1861ஆம் ஆண்டு லாரன்ஸ் நிவன் என்பவரால் டைகர் ஆர்க்கிட் சிங்கப்பூரில் நடப்பட்டது என்று டாக்டர் சூ தெரிவித்தார். லாரன்ஸ் நிவன் சிங்கப்பூர் பூமலையின் முதல் மேலாளர் ஆவார்.

இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டைகர் ஆர்க்கிட் சிங்கப்பூரில் காணப்பட்டது.

டைகர் ஆர்க்கிட் சிங்கப்பூரை பூர்விகமாக கொண்ட மலர். அது முழுமையாக வளர கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் எடுக்கும் என்று டாக்டர் சூ தெரிவித்தார்.

டைகர் ஆர்க்கிட் பூப்பதைக் கணிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். பொதுவாக அவை சில ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்