நகர மையப்பகுதியில் அவசர சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 2) முதல் செப்டம்பர் 4 ஆம் தேதிவரை பின்னிரவு நேரங்களில் 18 பேருந்துச் சேவைகளின் பாதைகள் மாற்றப்படுகின்றன.
36, 56, 57, 70M, 77, 97, 100, 106, 111, 130, 131, 133, 167, 195, 196, 857, 960 ஆகிய பேருந்துச் சேவைகள் பாதை மாற்றப்படுகின்றன.
மூன்று நாளும் இரவு 10 மணி முதல் அன்றைய நாளின் கடைசிப் பேருந்து சேவை வரை இந்தப் பாதை மாற்றம் நடப்பில் இருக்கும்.
பீச் ரோடு, நிக்கல் ஹைவே, ராஃபிள்ஸ் அவென்யூ மத்திய வட்டாரப் பகுதிகளை ஒட்டியுள்ள சில பேருந்து நிறுத்தங்களில் தனது நிறுவனப் பேருந்துகள் நிற்காது என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் (SBS Transit) செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பேருந்துச் சேவைகள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் வெளியிட்ட தனி அறிக்கையில், தனது பேருந்துகள் ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் பொலிவார்ட் ஆகிய சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும் எனத் தெரிவித்துள்ளது.


