தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் வீட்டு விலை 2.3% உயர்வு

2 mins read
722efdab-e487-4d1b-8069-3ee8d9d57dfe
தனியார் வீட்டு விலைக் குறியீடு சென்ற ஆண்டில் 3.9 விழுக்காடு அதிகரித்தது. 2020ஆம் ஆண்டுக்குப்பின் பதிவான ஆகக் குறைந்த வருடாந்தர விலை உயர்வு இது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் வீடுகளின் விலை சென்ற ஆண்டின் (2024) நான்காம் காலாண்டில் 2.3 விழுக்காடு அதிகரித்தது.

அதற்கு முந்தைய காலாண்டில் அது 0.7 விழுக்காடு சரிந்தது.

சிங்கப்பூரில் அடைமானக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் புதிய வீடுகள் விற்பனை அதிகரித்தது. 2024ன் இறுதிக் காலாண்டில் தனியார் வீட்டு விலை உயர்ந்ததற்கு இது காரணமாகக் கருதப்படுகிறது.

தனியார் வீட்டு விலைக் குறியீடு சென்ற ஆண்டில் 3.9 விழுக்காடு அதிகரித்தது. ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டு அது 6.8 விழுக்காடாகவும் 2022ல் 8.6 விழுக்காடாகவும் பதிவானது.

2020ஆம் ஆண்டுக்குப்பின் சென்ற ஆண்டுதான் ஆகக் குறைந்த வருடாந்தர விலை உயர்வு பதிவாகியுள்ளது.

சென்ற ஆண்டின் மூன்றாம், நான்காம் காலாண்டுகளில் தனியார் வீட்டு விலை முறையே 3.4 விழுக்காடும் 0.1 விழுக்காடும் சரிந்தது.

மேலும், சில புதிய வீட்டுத் திட்டங்கள் விற்பனைக்கு விடப்பட்டதால், அடுக்குமாடி வீடுகளின் விலை 2024ன் நான்காம் காலண்டில் 3 விழுக்காடு அதிகரித்தது. மூன்றாம் காலாண்டில் அது 0.1 விழுக்காடு கூடியது.

சென்ற ஆண்டு முழுவதும், தரை வீடுகளின் விலை 0.9 விழுக்காடு உயர்ந்தது. தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை 4.7 விழுக்காடு அதிகரித்தது.

தொடர்புடைய செய்திகள்

சொத்துச் சந்தையில் வர்த்தக ரீதியாக அதிகமானோர் விரும்பும் பகுதிகளில் (prime district) கூட்டுரிமை வீடுகளின் விலை சென்ற ஆண்டு 4.5 விழுக்காடு ஏற்றம்கண்டது. புறநகர்ப் பகுதிக் கூட்டுரிமை வீடுகளின் விலை 3.7 விழுக்காடு அதிகரித்தது.

சென்ற ஆண்டு, சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் கட்டிமுடிக்கப்படாத 6,647 தனியார் வீட்டுத் திட்டங்களை விற்பனைக்கு விட்டதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது. 2023ல் அந்த எண்ணிக்கை 7,551ஆகப் பதிவானது.

இவ்வேளையில், சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் தனியார் வீட்டு வாடகையில் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. 2023ல் தனியார் வீட்டு வாடகை 8.7 விழுக்காடு உயர்ந்த நிலையில் சென்ற ஆண்டு அது 1.9 விழுக்காடு வீழ்ச்சிகண்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்