சிராங்கூனில் புதன்கிழமை (ஜூலை 24) இரவு மூன்று கார்களும் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் ஒரு மஞ்சள் நிற கார் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்ததுடன் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் சேதமுற்றன.
லோரோங் சுவான்-பவுண்டரி சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து இரவு 10.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகளும் ஒரு காரை ஓட்டிய 45 வயது ஆடவரும் மற்றொரு காரை ஓட்டிய 76 வயது மாதும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.
விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.