கார்-வேன் மோதல்; இருவர் மருத்துவமனையில்

கார்-வேன் மோதல்; இருவர் மருத்துவமனையில்

1 mins read
e496c8d4-e6fd-4c33-8fa0-6ebc26037426
படம்: SG ROAD VIGILANTE - SGRV/FACEBOOK -

அங் மோ கியோவில் கார் மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 22) மாலை 6:20 மணிவாக்கில் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து லெண்டோர் அவென்யூ நோக்கிச் செல்லும் அங் மோ கியோ ஸ்திரீட் 31க்கும் அங் மோ கியோ அவென்யூ 6க்கும் இடையிலான சந்திப்பில் நடந்தது.

காரில் இருந்த 60 வயது ஓட்டுநரும், 56 வயது பெண் பயணியும் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

46 வயது வேன் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் உள்ளது. காணொளியில் வேனும் காரும் மோதும் காட்சி தெளிவாகப் பதிவாகியிருந்தது.

குறிப்புச் சொற்கள்