குற்றவாளி, ஏஐஏ சிங்கப்பூர் நிறுவனத்துக்குக் காப்புறுதி முகவராக வேலை செய்து வந்தார். சம்பந்தப்பட்ட நண்பர் தன்னிடம் ஒப்படைத்த 20,000 வெள்ளியை அவர் களவாடியிருக்கிறார்.
குற்றவாளியான ஸைபுன் நேசா அதாம், 65, பின்னர் அத்தொகையில் 13,000 வெள்ளியை ஒரு மோசடிக்குப் பறிகொடுத்தார். வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) அவருக்கு எட்டு மாதம், இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நம்பிக்கை துரோகம் இழைத்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். ஸைபுன், தற்போது வேலையில்லாமல் இருக்கிறார்.
அவர், தானாகவே நண்பருக்கு 1,000 வெள்ளியைத் திருப்பிக் கொடுத்தார். எஞ்சிய 19,000 வெள்ளியை ஏஐஏ, நண்பரிடம் வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த நண்பர், ஸைபுன் வழங்கிவந்த காப்புறுதிச் சேவைகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடினார் என்பதும் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட நண்பர், ஓர் 68 வயது மாது என்றம் தெரிவிக்கப்பட்டது.

