மூத்தோரின் சுகாதார, சமூகத் தேவைகளுக்கு புதிய மையம்

மூத்தோரின் சுகாதார, சமூகத் தேவைகளுக்கு புதிய மையம்

1 mins read
c62e1fb1-c9e3-4ba4-903c-27279e08849b
-

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மூத்தோரின் சுகாதார, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் புதிய மையம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. 'அவர் சில்வர்கேர் ஹப்' என்றழைக்கப்படும் அம்மையத்தில் இரண்டு சுகாதாரப் பராமரிப்புக் கூடங்களும் ஒரு மூத்தோர் பராம ரிப்பு நிலையமும் இடம்பெற்றி ருக்கும். 'அவர் தெம்பனிஸ் ஹப்' பில் நிதி அமைச்சரும் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெங் சுவீ கியட் இம்மையத்தைத் தொடங்கி வைத்தார்.

அருகருகே அமைந்திருக்கும் இரு வெவ்வேறு சுகாதாரப் பரா மரிப்புக் கூடங்களை மூத்தோர் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் தடையற்ற பராமரிப்பை அவர்கள் பெறுவர். மேலும், மூத்தோரின் உடல் நலம், பராமரிப்புக்கான சிகிச்சை விவரங்கள் ஆகியன தொடர்பான தகவல்களை இவ்விரு கூடங் களும் பகிர்ந்துகொள்ளும். சுகாதாரப் பராமரிப்புக் கூடங் களில் பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி சிகிச்சை, மறதிக் கான பகல்நேரப் பராமரிப்பு, சமூக மறுவாழ்வு, பராமரிப்பு ஆலோ சனை, அடிப்படைப் பராமரிப்பு போன்ற சேவைகள் வழங்கப்படும்.

ஈஸ்ட்டர்ன் சமூக சுகாதார நிலையத்தில் உடற்பயிற்சி சிகிச்சை மேற்கொள்ளும் மூத்தோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்