மின்சிகரெட் தொடர்பில் 2,589 பேர் சிக்கினர்

மின்சிகரெட் தொடர்பில் 2,589 பேர் சிக்கினர்

1 mins read
67754cdc-92b7-458f-8116-3b382977a656
அமலாக்க நடவடிக்கையில் 36,000க்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் மற்றும் அதன் தொடர்பான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மின்சிகரெட் வைத்திருந்ததற்காகவும் அதைப் பயன்படுத்தியதற்காகவும் 2,212 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுகாதார அமைச்சும், சுகாதார அறிவியல் ஆணையமும் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் சிக்கினர்.

அதேபோல் 377 பேர் ‘கேபாட்’ என்னும் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் தொடர்பாகச் சிக்கினர்.

அமலாக்க நடவடிக்கையில் 36,000க்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் மற்றும் அதன் தொடர்பான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரும்பாலானவை சோதனைச் சாவடிகளில் பிடிபட்டன. 24 மின்சிகரெட் கடத்தல் சம்பவங்களும் முறியடிக்கப்பட்டன.

அதிகாரிகளின் நடவடிக்கையில் மின்சிகரெட் விற்பனையாளர்கள் 13 பேரும் மின்சிகரெட் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே சமூக ஊடகங்களில் மின்சிகரெட் சார்ந்த படங்களும் காணொளிகளும் பதிவிட்ட 10 பேருக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

அதேபோல் இணைய வர்த்தகத் தளங்களில் காணப்பட்ட 600க்கும் மேற்பட்ட மின்சிகரெட் விற்பனை தொடர்பான பதிவுகள் நீக்கப்பட்டன.

மின்சிகரெட் விற்பனை செய்த 13 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 21 வயது ஆடவர் ஒருவருக்கு 41 வாரம் சிறைத் தண்டனையும் 32 வயது ஆடவருக்கு 40 வாரம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்