‘ஜிஇ வெர்னோவா’ (GEV) நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள தனது ‘ஜிஇ ரிப்பேர் சொல்யூஷன்ஸ் சிங்கப்பூர்’ (GRSS) கிளையை விரிவுபடுத்த 20 மில்லியன் டாலர் (27.4 மில்லியன் வெள்ளி) முதலீடு செய்யவிருக்கிறது.
அதன் மூலம் 100க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த உலகளவில் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ஜிஇ வெர்னோவா’ திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) தெரிவித்தது.
‘ஜிஇ வெர்னோவா’வின் அதிநவீன, அதிக ஆக்கபூர்வமான குளிரூட்டப்பட்ட காற்றில் இயங்கும் காற்றிலிருந்து எரிசக்தி உருவாக்கும் வளிமச் சுழலிகளின் (gas turbines) எண்ணிக்கை ஆசியா உள்ளிட்ட வட்டாரங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. அவற்றைப் பழுதுபார்க்கும் ‘ஜிஇ ரிப்பேர் சொல்யூஷன்ஸ் சிங்கப்பூரின்’ ஆற்றலைக் குறிப்பிடத்தக்க அளவு வளர்க்க அந்த முதலீடு உதவும் என்று ‘ஜிஇ வெர்னோவா’ குறிப்பிட்டது.
உலகில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் ஏறக்குறைய 25 விழுக்காட்டை ‘ஜிஇ வெர்னோவா’வின் சேவைகளை நாடும் நிறுவனங்களும் அமைப்புகளும் உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில், எரிசக்தி உருமாற்றத்தை வழிநடத்தி நம்பகத்தன்மை, கட்டுப்படியான விலை, நீடித்த நிலைத்தன்மை ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் தொடர்பில் இருந்துவரும் எரிசக்தி சார்ந்த குழப்பங்களுக்குத் தீர்வுகாண தாங்கள் வித்தியாசமாக, நல்ல நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் ‘ஜிஇ வெர்னோவா’ 7,000க்கும் அதிகமான காற்றிலிருந்து எரிசக்தி உருவாக்கும் இயந்திரங்களை நடத்துகிறது. ஆகப் பெரிய, ஆக ஆக்கபூர்வமானவையாகக் கருதப்படும் அதிநவீன, அதிக ஆக்கபூர்வமான குளிரூட்டப்பட்ட காற்றில் இயங்கும் அத்தகைய இயந்திரங்களும் அவற்றில் அடங்கும்
அதிநவீன, அதிக ஆக்கபூர்வமான குளிரூட்டப்பட்ட காற்றில் இயங்கும் வளிமச் சுழலிகள் ஹைட்ரஜன், இயற்கை எரிவாயு கலவையில் இயங்கக்கூடியவை. அதன் மூலம் இயற்கை எரிவாயுவை மட்டும் பயன்படுத்தும்போது வெளிவருவதைவிட குறைந்த அளவில் கரியமில வாயு வெளியேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.