மரினா பே, பூன் லே ஆகிய இரு இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிகளை முன்னிட்டு புதன்கிழமை (டிசம்பர் 31), 29 பேருந்துs சேவைகளின் வழக்கமான பயணப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எஸ்பிஎஸ் டிரான்ஸிட், எஸ்எம்ஆர்டி ஆகிய நிறுவனங்கள் மரினா பே வட்டாரத்தில் 26 பேருந்துசேவைகளும் பூன் லேயில் மூன்று சேவைகளும் அன்றைய தினம் மாற்றுப் பாதைகளில் செல்லும் என்று தெரிவித்துள்ளன.
மரினா பே கொண்டாட்டங்களை முன்னிட்டு 26 பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்கமாட்டா.
பேஃபிரண்ட் அவென்யூ, பீச் ரோடு, பிராஸ் பாசா ரோடு, செசில் ஸ்திரீட், கொலியர் கீ, சென்ட்ரல் பொலிவார்ட், எஸ்பிளனெட் டிரைவ், ஃபுல்லர்டன் ரோடு, மரினா பொலிவார்ட், நிக்கல் ஹைவே, ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் பொலிவார்ட், ராபின்சன்ஸ் ரோடு, ஸ்டாம்ஃபர்ட் ரோடு, தெமாசெக் அவென்யூ, தெமாசெக் பொலிவார்ட் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் அவை.
மரினா பே பகுதியில் நிற்காமல் செல்லப்போகும் பேருந்துகளின் எண்கள்:
10, 14, 16, 36, 56, 57, 70/70M, 77, 97, 100,106, 107, 111, 130, 131, 133, 167, 195,196, 400, 502, 518, 857, 960, 960e, 961 ஆகியவையாகும்,
புதன்கிழமை மாலை ஆறு மணிமுதல் அந்தச் சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் உள்ள நிறுத்தங்களைத் தவிர்க்கும்.
பூன் லே பகுதியில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் தொடங்கும்போது பூன்லே டிரைவ், பூன்லே பிளேஸ், கார்ப்பரேஷன் ரோடு ஆகிய சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் புதன்கிழமை இரவு 11.30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்குப் பேருந்து எண் 99, நில்லாமல் செல்லும்.
தொடர்புடைய செய்திகள்
பேருந்து எண்கள் 240, 246 ஆகிய இரண்டு சேவைகளும் பூன்லே டிரைவ், பூன்லே பிளேஸ் ஆகிய சாலைகளில் உள்ள பல பேருந்து நிறுத்தங்களில் புதன்கிழமை 11.30 மணி முதல் வியாழக்கிழமை (ஜனவரி 1) நள்ளிரவைக் கடந்து 12.30 மணிவரை நிற்காமல் கடந்து செல்லும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேல் விவரங்களுக்கு 1800-336-8900 (SMRT) அல்லது 1800-287-2727 (SBS Transit) ஆகிய எண்களையோ தொடர்புகொள்ளலாம். மேலும், www.smrt.com.sg அல்லது www.sbstransit.com.sg எனும் இணைய முகவரிகளையும் நாடலாம்.

