அக்கம்பக்க மேம்பாட்டுப் பணிகளால் பயனடையும் 29,000 வீவக வீடுகள்

அக்கம்பக்க மேம்பாட்டுப் பணிகளால் பயனடையும் 29,000 வீவக வீடுகள்

2 mins read
4c35ec70-d958-4bd6-bfa0-674a99c00a5b
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்டும் (நடுவில்) கேன்பரா தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் கேப்ரியல் லாமும் (சிவப்பு சட்டை) ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற கேன்பரா தினத்தில் குடியிருப்பாளர்களுடன் உடற்பயிற்சி செய்தனர். - படம்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முழுவதும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் சுமார் 29,000 குடும்பங்கள், இரண்டு திட்டங்களின்கீழ் தங்கள் சுற்றுப்புறங்களில் மேம்பாடுகளைப் பெறும்.

சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு, அதன் மூப்படையும் மக்கள் தங்கள் சமூகங்களில் வசதியாக வாழ உதவும் வகையில் இந்த மேம்பாடுகளில், முதியோரை மையமாகக் கொண்ட வசதிகளை இணைக்கும் உடற்பயிற்சிப் பாதைகள், அமரும் இடங்கள், நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் அம்சங்கள் ஆகியவை அடங்கும்.

அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின்படி, கேன்பரா, ஹவ்காங், தோ பாயோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 17 திட்டங்களுக்கு $130 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் சனிக்கிழமை (ஏப்ரல் 18) தகவல் வெளியிட்டார்.

அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின் கீழ், தோ பாயோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 17 திட்டங்களுக்கு $130 மில்லியனுக்கும்  அதிகமான நிதி ஒதுக்கப்படும்.
அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின் கீழ், தோ பாயோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 17 திட்டங்களுக்கு $130 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேன்பராவில், செம்பவாங் அக்கம்பக்கத்தின் வருடாந்தர நன்கொடை நடைப்பயண நிகழ்வின்போது அவர் பேசினார். இந்த நடைப்பயணம், முதியவர்கள் மற்றும் தேவையுள்ளோரைப் பராமரிக்கும் குழுக்களுக்கு ஆதரவளிக்கிறது.

சமூகப் பங்காளிகளுக்கு ஆதரவளிப்பதைத் தவிர, முதியவர்கள் சுதந்திரமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கு ஏதுவாக, அரசாங்கம் பல்வேறு அக்கம்பக்கப் பகுதிகளை மேம்படுத்தி வருவதாக அமைச்சர் சீ தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ், முதியவர்களுக்கு உகந்த கூடுதல் மேம்பாடுகளைச் சேர்க்க வீவக தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இவை, முதியவர்கள் தங்கள் அண்டை வீட்டாருடன் பழகவும் உறவை வலுப்படுத்தவும் பொதுவான இடங்களை வழங்குகின்றன. இந்த இடங்களுக்குள் உள்ள அம்சங்கள், நமது முதியவர்கள் பாதுகாப்பாக நடமாடுவதற்கும், தங்கள் அக்கம்பக்கத்தில் நம்பிக்கையுடன் பயணம் செய்வதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளன,” என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ மேலும் விவரித்தார்.

20,000 குடும்பங்கள் பயனடையும்

அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு, நகர மன்றங்களால் செயல்படுத்தப்படும் இந்தப் பணிகள், சுமார் 20,000 குடும்பங்களுக்குப் பயனளிக்கும்.

அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ், இந்த 17வது தொகுதித் திட்டங்களை நிர்வகிக்கும் 14 நகர மன்றங்கள், மக்கள் காண விரும்பும் மேம்பாடுகள் குறித்த கருத்துகளைப் பெறுவதற்காக, கண்காட்சிகள், கருத்து சேகரிப்புகள் மூலம் அவர்களுடன் கலந்துரையாடும்.

திட்டத்தின் தன்மை, நிறைவேற்றும் சிக்கலைப் பொறுத்து, செயலாக்கம் மற்றும் நிறைவு செய்வதற்கான காலக்கெடு மாறுபடும் என வீவக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, முத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், அங் மோ கியோ, புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள மேலும் 10 குடியிருப்புப் பகுதிகளில் மூத்த குடிமக்களுக்கு உகந்த மேம்பாடுகளுடன் தரம் உயர்த்தும் பணிகள் 2026ஆம் ஆண்டின் பிற்பாதியில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்