அதிக விலையானாலும் வேகமாக விற்றுத்தீர்ந்த எஃப்1 நுழைவுச்சீட்டுகள்

1 mins read
e1cc61ed-9a60-4ccc-8300-6dd6c4b41e92
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் கார்பந்தயத்திற்கான நுழைவுச்சீட்டுகள் அதிக விலையாக இருந்தாலும் அவை விறுவிறுவென விற்றுத்தீர்ந்து வருகின்றன.

மூன்று நாள்களுக்கான படாக் கிளப் நுழைவுச்சீட்டின் விலை 11,016 வெள்ளியாக உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போதைய நுழைவுச்சீட்டின் விலை கிட்டத்தட்ட 10 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில நுழைவுச்சீட்டுகள் தான் இன்னும் விற்காமல் இருப்பதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.

சிங்கப்பூரின் இரவு நேரக் கார்பந்தயத்தைக் காண உலக அளவில் ரசிகர்கள் கூடுவதால் பந்தய சாலையை ஒட்டியுள்ள ஹோட்டல் அறைகளுக்கான முன்பதிவுகளும் முடிந்துவிட்டன.

சிங்கப்பூர் இரவு நேரக் கார்பந்தயம் செப்டம்பர் 15, 16, 17 நடக்கிறது.

கார் பந்தயத்துடன் அந்த மூன்று நாள்கள் இசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்