ஜூரோங்கில் விபத்து; மதுபோதையில் கார் ஓட்டிய சந்தேகத்தில் ஓட்டுநர் கைது

ஜூரோங்கில் விபத்து; மதுபோதையில் கார் ஓட்டிய சந்தேகத்தில் ஓட்டுநர் கைது

1 mins read
0892d5af-5f04-4272-bfe5-a1128e05e7d0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூரோங் வெஸ்ட் செண்ட்ரல் 1-இல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) இரவு இரண்டு கார்கள் மோதிக்கொண்டன.

விபத்தில் சிக்கிய மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது சாலையோரம் இருந்த விளக்குக் கம்பம் மற்றும் சில மரங்கள் மீது கார்கள் மோதி சேதமாகின.

பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்த 59 வயது ஆடவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து இரவு 11:15 மணிக்கு தங்களுக்கு தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கூறினர்.

விபத்தில் சிக்கிய மூவரும் எங் தெங் ஃபாங் மருத்துவமனையில் சுய நினைவுடன் சேர்க்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்