சிங்கப்பூர் கொடிகளை எரித்த ஆடவருக்கு 3 மாதம் ஆலோசனை நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல உத்தரவு

1 mins read
3739faa7-aff9-44fc-8919-83cd20a45e75
2022ஆம் ஆண்டு தேசிய தினத்தன்று சென் யொங்ஷெங் மது அருந்திவிட்டு சிங்கப்பூர் கொடிகளையும் தனது அரைக் காற்சட்டையையும் எரித்துவிட்டு வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டின் தேசிய தினத்தன்று 40 வயதான சென் யொங்ஷெங் எனும் ஆடவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு, ஒரு காப்பிக் கடைக்கு அருகில் தீ மூட்டி சிங்கப்பூர் கொடிகளையும் தேசிய தின அலங்காரங்களையும் எரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு, தனது அரைக் காற்சட்டையை அத்தீயில் எரித்துவிட்டு அவர் நிர்வாணமாக வீட்டிற்கு நடந்துசென்றதாகக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் 70 மணி நேரம் சமூக சேவை செய்யும்படி சென்னுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், மூன்று மாதங்களுக்குப் பகல்நேரம் காவல் நிலையத்திற்கு சென்று வருகையைப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது.

சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை அத்தகைய உத்தரவுகளை அமல்படுத்துகிறது..

சிறைத்தண்டனைக்குப் பதிலாக, அவர் கண்காணிப்புக்காகவும் ஆலோசனைக்காகவும் அந்நிலையத்திற்குச் செல்லவேண்டும்.

கடந்த ஏப்ரலில் குறும்புச் செயலில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டை சென் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிப்பின்போது பொது இடத்தில் நிர்வாணமாகக் காணப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.

குறும்புச் செயலில் ஈடுபட்டதற்காக அவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்