கேப்பிட்டலேண்ட் கடைத்தொகுதிகளில் விநியோக ஓட்டுநர்களுக்கு 30 நிமிடச் சலுகை

கேப்பிட்டலேண்ட் கடைத்தொகுதிகளில் விநியோக ஓட்டுநர்களுக்கு 30 நிமிடச் சலுகை

1 mins read
e7535916-9476-4ee5-85db-00794a731747
30 நிமிட இலவச வாகன நிறுத்த நேரம் என்னும் சலுகை ஜூலை முதல் நடப்புக்கு வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கேப்பிட்டலேண்ட் கடைத்தொகுதிகளில், விநியோக ஓட்டுநர்களின் வாகனங்களைக் கட்டணமின்றி நிறுத்திவைப்பதற்கான நேரம் 10 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களாக அதிகரிக்கிறது.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள 12 கேப்பிட்டலேண்ட் கடைத்தொகுதிகளில் ஜூலை முதல் அந்தக் கூடுதல் அவகாசம் நடப்புக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக ஓட்டுநர்கள் கடைத்தொகுதியின் வெவ்வேறு தளங்களில் உள்ள பல்வேறு கடைகளில் இருந்து உணவைப் பெற 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆவதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தச் சலுகை நீட்டிக்கப்படுகிறது.

முகம்மது கைரிலி என்னும் 34 வயது ‘கிராப்ஃபுட்’ விநியோக ஓட்டுநர், தற்போது நடப்பில் உள்ள 10 நிமிட அவகாசத்திற்குள் உணவைப் பெற இயலாததால் வாகன நிறுத்தக் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய விநியோக ஊழியர் சங்கத்தில் இடம்பெற்றுள்ள ஓட்டுநர்களும் மோட்டார்சைக்கிள் மூலம் விநியோகத்தில் ஈடுபடுவோரும் அந்தச் சலுகையை அனுபவிக்கலாம்.

தேசிய தொழிற்சங்க காங்கிரசின் ஓர் அங்கமான அந்தச் சங்கம், தமது உறுப்பினர்களின் பாதி நேரம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பொருள்களைச் சேகரிப்பதிலேயே போய்விடுவதாகக் கூறியது.

“சில நேரங்களில் உணவுப்பொருள்கள் தயாராக அதிகம் நேரம் பிடிப்பதால் அவர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

“பல விநியோக ஓட்டுநர்கள் 10 நிமிடங்களுக்கும் மேல் காத்திருப்பதால் ஒவ்வொரு முறையும் $1.30 வாகன நிறுத்தக் கட்டணத்தை அவர்கள் செலுத்துகிறார்கள்,” என்று சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்