தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 35 பேர் கைது

2 mins read
e07e8013-a7ce-4e5f-a32b-f0181d40145b
ஜூரோங் ஈஸ்ட் மற்றும் கேலாங்கில் நடந்த சோதனைகளின் போது 35 பேர் கைது செய்யப்பட்டனர். - படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை

பாரம்பரிய சீன மருத்துவ நிலையங்களில் சட்டவிரோதமாக பாலியல் சேவைகளை வழங்குவது போன்ற பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 35 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களில் ஒன்பது பேரான எட்டு பெண்களும் ஓர் ஆணும், நவம்பர் 12க்கும் டிசம்பர் 3ஆம் தேதிக்கும் இடையில் ஜூரோங் ஈஸ்டில் உள்ள ஓர் உடற்பிடிப்பு நிலையத்திலும் ஐந்து பாரம்பரிய சீன மருத்துவ நிலையங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டனர்.

34, 49 வயதுடைய பெண்கள் பாலியல் சேவைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் 58 வயதுடைய நபர் பாலியல் சேவை நடத்தும் ஓர் இடத்தை நிர்வகித்ததற்காகக் கைது செய்யப்பட்டார் என்று டிசம்பர் 13ஆம் தேதி காவல்துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில், உடற்பிடிப்பு நிலையம் செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வருவதும், அந்த இடத்தில் முன்பு செயல்பட்ட வர்த்தகத்தின் சான்றிதழ்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஐந்து பாரம்பரிய சீன மருத்துவ நிலையங்களில் ஒன்று அந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் இடமாக பதிவு செய்யப்படவில்லை.

இதற்கிடையே, டிசம்பர் 6ஆம் தேதி நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், கேலாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான 42 வயது பெண், பாலியல் சேவைகளை வழங்கும் கும்பலின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தார்.

அனைத்து சந்தேக நபர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.

வேறொரு நபரின் பாலியல் சேவைக்கு உதவும் அல்லது உதவக்கூடிய எந்தவொரு சேவையையும் வழங்குவதற்காக, தெரிந்தே கோருதல், பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்வது போன்ற குற்றச் செயல்களைப் புரிவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $100,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

பாலியல் சேவைக்காக ஓர் இடத்தை நிர்வகிக்கும் அல்லது அது தொடர்பில் உதவி செய்யும் எவருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்