தகுதிநீக்கம் செய்யப்பட்டும் வாகனம் ஓட்டியது, செல்லுபடியாகும் உரிமமின்றி வாகனம் ஓட்டியது, காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக 24 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட 18 வாகனமோட்டிகள் கைது செய்யப்பட்டனர்.
தற்காலிகத் தடை விதிக்கப்பட்டும் வாகனம் ஓட்டியது, தவறான உரிமப் பிரிவுடன் வாகனம் ஓட்டியது, தற்காலிக உரிமத்துடன் கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்கத் தவறியது போன்ற குற்றங்களுக்காக 23 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்ட மேலும் 18 வாகனமோட்டிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
ஜூலை 15 முதல் 24ஆம் தேதி வரை போக்குவரத்துக் காவல்துறையும் ஏழு காவல்துறைப் பிரிவுகளும் சேர்ந்து நடத்திய திடீர் சோதனையில் அந்த வாகனமோட்டிகள் பிடிபட்டனர்.
பிடிப்பட்ட 36 வாகனமோட்டிகளிடம் விசாரணை தொடர்கிறது.

