மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 39 பேர் மீது குற்றச்சாட்டு

1 mins read
72d4e701-5855-46d8-a4c3-644ee175942c
மாதிரிப்படம்: - அன்ஸ்பிளா‌ஷ்

மொத்தம் 39 வாகன ஓட்டிகள் மீது வியாழக்கிழமை(ஜூன் 26) மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

அவர்கள் 26லிருந்து 61 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் 35 பேர் ஆண்கள் என்றும் நால்வர் பெண்கள் என்றும் காவல்துறை புதன்கிழமை (ஜூன் 25) அறிக்கையில் குறிப்பிட்டது.

கடந்த மார்ச் மாதம் முதல் இம்மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் சுவாசப் பரிசோதனை மூலம் மது அருந்தியதை அடையாளம் காணும் சோதனையில் அவர்கள் பிடிபட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி பிறருக்குத் தொந்தரவு தரும் விதத்தில் தங்கள் வாகனங்களை விட்டுச்சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஐவர் மீது கூடுதல் குற்றச்சாட்டு சுமத்தப்படும். அந்த ஐவர், 33லிருந்து 61 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அவர்கள் ஹில் ஸ்திரீட், ஜாலான் யூனோஸ், புக்கிட் தீமா ரொடு, பாய லேபார் ரோடு, அப்பர் தாம்சன் ரோடு ஆகியவற்றில் தங்கள் வாகனங்களை நிறுத்திச் சென்றதாக நம்பப்படுகிறது. அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள், சாலையைப் பயன்படுத்தும் பிறருக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்களுக்கு அபாயம் ஏற்படுத்தியதாகவும் காவல்துறை சொன்னது.

அந்த ஐவரில் ஒருவர் மீது, மதுபோதைச் சோதனை நடத்த ஒப்புக்கொள்ளாததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்