சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக தீவு முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜூலை மாதத்தில் பதிவான சராசரி மழை அளவுக்கு கிட்டத்தட்ட ஒத்ததாக வியாழக்கிழமை பெய்த மழையின் அளவு இருந்தது.
வியாழக்கிழமை காலை 7.40 மணியிலிருந்து 11.30 மணி வரை 120.2 மி.மீ மழை பதிவானது. இது சிங்கப்பூரில் வழக்கமாக ஜூலை மாதத்தில் பதிவாகும் சராசரி மழைப்பொழிவைக் காட்டிலும் 80 விழுக்காட்டிற்கும் மேல் அதிகம் எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
லக்கி பிளாசாவிற்கு அருகிலுள்ள ஸ்டாம்போர்ட் கால்வாய், பிராடெல் ரயில் நிலையம், சன்செட் டிரைவ் போன்ற பகுதிகளில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கனமழையால் சிம் டார்பி மையத்திற்கு அருகிலுள்ள டன்யர்ன் சாலையில் காலை 9.25 மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் இருக்கும் இரண்டு போக்குவரத்து வழித்தடங்களைத் தற்காலிகமாக பொதுப் பயனீட்டுக் கழகம் மூடியது. அந்தப் பகுதியில் வெள்ளம் 15 நிமிடங்களில் வடிந்தது. அதற்குப் பிறகு போக்குவரத்துக்காக அந்த வழித்தடங்கள் திறந்துவிடப்பட்டன.

