தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபேர்பிரைசில் ஒவ்வொரு $50 ஒற்றைப் பரிவர்த்தனைக்கும் $4 பற்றுச்சீட்டு

1 mins read
a98a3fd4-bf2a-44d2-851d-aa4693f62389
பற்றுச்சீட்டுகள் நவம்பர் 23ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31வரை பயன்படுத்தப்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நவம்பர் 22ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை ஃபேர்ஃபிரைஸ் பேரங்காடிகளிலும் யூனிட்டி கடைகளிலும் ஒவ்வொரு $50 ஒற்றைப் பரிவர்த்தனைக்கும் $4 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒற்றைப் பரிவர்த்தனையில் அதிகபட்சம் மூன்று பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நவம்பர் 21ஆம் தேதியன்று ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்தது.

பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட நாளன்று அவற்றை பயன்படுத்த முடியாது.

மறுநாளிலிருந்து அவற்றைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

பற்றுச்சீட்டுகள் நவம்பர் 23ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31வரை பயன்படுத்தப்படலாம்.

ஒரே பரிவர்த்தனையில் பல பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முடியும்.

பற்றுச்சீட்டுகளை அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, யூனிட்டி கடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

சாங்கி விமான நிலையத்தில் உள்ள யூனிட்டி கடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

“ஆண்டிறுதியில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒன்றுகூட சிங்கப்பூரர்கள் திட்டமிட்டு வருகின்றனர். செலவுகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று ஃபேர்பிரைஸ் குழுமம் அறிக்கை வெளியிட்டது.

இதே போன்ற திட்டத்தை அக்குழுமம் அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்