தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய கம்போங் பூகிசில் 4,000 நீர்முகப்பு வீடுகள்

2 mins read
24e51163-98c5-41de-aaef-69f441556ff4
கம்போங் பூகிஸ் வட்டாரத்துக்காக ஒதுக்கப்பட்ட 17 ஹெக்டர் நிலப்பரப்பில் நகர மறுசீரமைப்பு ஆணையம் விரிவான மேம்பாட்டுத் திட்டங்களை வகுக்கிறது. - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்

கம்போங் பூகிஸ் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 4,000 நீர்முகப்பு வீடுகள் கட்டப்படும் வகையில் அதிகாரிகள் மேம்பாட்டுத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளனர். காலாங் ஆற்றின் அருகே வரவிருக்கும் பல பேட்டைகளில் அதுவும் ஒன்று.

நகர மறுசீரமைப்பு ஆணையம் 2025ஆம் ஆண்டுக்கான வரைவு பெருந்திட்டக் கண்காட்சியில் காலாங் ஆற்றருகே வரும் பேட்டைகள் இடம்பெற்றுள்ளன. ஆணையத்தின் நிலையத்தில் உள்ள கண்காட்சி நவம்பர் 29ஆம் தேதி வரை நீடிக்கும்.

ஒட்டுமொத்தத்தில் காலாங் டிஸ்ரிபார்க், காலாங் தொழிற்பேட்டை, தஞ்சோங் ரூ என ஆற்றுக்கு அருகே வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உருவாக்கப்படும்.

நகர மையத்திற்கு அருகே கூடுதல் சிங்கப்பூரர்கள் தங்குவதற்கு வாய்ப்பளிக்கும் முயற்சிகளில் புதிய வீடுகள் அடங்கும். அத்துடன் 1970களில் கட்டப்பட்ட கேலாங் பாரு, நார்த் பிரிட்‌ஜ் சாலை ஆகியவற்றில் உள்ள பழைய வீடுகளும் புதுப்பிக்கப்படும்.

கம்போங் புகிஸ் வட்டாரத்துக்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டம் குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் ஒதுக்கப்பட்ட 17 ஹெக்டர் பரப்பளவில் 8.2 ஹெக்டர் பரப்பளவு 2019ஆம் ஆண்டு விற்பனைக்கு விடப்பட்டது. ஆனால் காலாங் கேஸ்வோர்க்ஸ் எரிவாயு உற்பத்தித் தளம் இருந்த அந்தப் பகுதியில் மண் சீரமைப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் 2022ஆம் ஆண்டு அது அரசாங்க நில விற்பனை தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

விற்பனைக்கு விடப்பட்ட 8.2 ஹெக்டர் பரப்பளவில் பல்வேறு மேம்பாடுகளுக்காக நான்கு பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், நகர மறுசீரமைப்பு ஆணையம் வகுத்த 2025ஆம் ஆண்டுக்கான வரைவு பெருந்திட்டத்தில் அவற்றுள் இரண்டு பகுதிகள் மட்டும் எஞ்சியுள்ளன.

மற்ற இரண்டு பகுதிகளின் எல்லைகள் மறுவரை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று புதிய சாலையுடன் கூடிய இரண்டு குடியிருப்பு நிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதி வீடுகளுக்கும் முதல் தளத்தில் வர்த்தகத்துக்கும் கட்டப்படும்.

கம்போங் புகிஸ், மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப்படுமா என்ற கேள்விக்கு இதற்குமுன் விற்பனைக்கு விடப்பட்ட 8.2 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட நான்கு நிலப்பகுதிகளுக்கான திட்டங்களை மறுஆய்வு செய்வதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டது.

அந்த வட்டாரத்தில் கிட்டத்தட்ட 4,000 புதிய நீர்முகப்பு வீடுகளை அமைக்க திட்டமுள்ளதாக ஆணையம் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்