தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாகப் பணத்தைக் கைமாற்றியதாக நம்பப்படும் 41 பேர்

1 mins read
a755c16f-f6df-4304-881e-43dcdc509388
ஜூன் இரண்டிலிருந்து ஆறாம் தேதிக்குள் சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சட்டவிரோதமாகப் பணத்தைப் பெற்றுக் கைமாற்றியதாக அல்லது பல்வேறு மோசடிச் சம்பவங்களில் அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 41 பேர் மீது வரும் வாரம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தேக நபர்களில் 32 பேர் ஆண்கள், ஒன்பது பேர் பெண்கள். அவர்கள் 16லிருந்து 64 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்படும் மோசடிகள், வாடகை மோசடிகள், வேலை வாய்ப்பு மோசடிகள் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இம்மாதம் இரண்டாம் தேதியிலிருந்து ஆறாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் சந்தேக நபர்கள் மீது பல்வேறு குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த 41 சந்தேக நபர்களில் 35 பேர், குற்றக் கும்பல்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க தங்கள் வங்கிக் கணக்குகளை விட்டுக்கொடுத்தனர் அல்லது விற்றனர் என்று நம்பப்படுகிறது.

இதில் மற்றொரு பிரிவினர் ஒன்று சட்டவிரோதச் செயல்களுக்காகத் தங்கள் சிங்பாஸ் விவரங்களைப் பிறரிடம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள் பலரிடம் வங்கி அல்லது சிங்பாஸ் கணக்குகளை விற்றால் 9,000 வெள்ளி வரையிலான தொகை வழங்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்