தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி: 411 பேரிடம் விசாரணை

1 mins read
00339259-388d-4bed-a13b-8ce5ff3ffdd1
மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 411 பேர் காவல்துறையால் விசாரிக்கப்படுகிறார்கள்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 411 பேரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது.

அவர்களில் 16 முதல் 75 வயதுக்குட்பட்ட 292 ஆண்களும் 119 பெண்களும், 1,500க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) காவல்துறை தெரிவித்தது.

வேலை, முதலீடு, இணையக் காதல், மின்வர்த்தகம், தனிப்பட்ட விவரங்களைக் களவாடுதல் மற்றும் அரசாங்க அதிகாரிகள் போன்ற ஆள்மாறாட்டம் தொடர்பான மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள், $13 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை இழந்திருக்கிறார்கள்.

2023 ஜனவரி - ஜூன் காலகட்டத்தில், 22,339 மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் $334.5 மில்லியனை இழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 55 விழுக்காட்டினர் $2,000 வரை இழந்தார்கள்.

இதுபோன்ற குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்க்க, மற்றவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு அல்லது தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டாம் எனக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்