தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர், இந்தோனீசிய ஆகாயப் படைகள் 45 ஆண்டு நிறைவு

1 mins read
7de3b28b-abff-4e1f-8db0-3300a54f7446
சிங்கப்பூருடன் இந்தோனேசியாவும் அடுத்த வாரம் வரை ஆகாயப் படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர், இந்தோனீசிய ஆகாயப் படைகள் 45 ஆண்டு தற்காப்பு உறவின் நிறைவையொட்டி இந்தோனீசியாவில் அடுத்த வாரம் வரை கூட்டுப் பயிற்சியை நடத்தவிருக்கின்றன. அதில் 100க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இலாங் இன்டோபுரா பயிற்சி மே 13ஆம் தேதியிலிருந்து மே 26ஆம் தேதி பெக்கான்பாருவில் உள்ள ரோஸ்மின் நுர்ஜாடின் ஆகாயப் படைத் தளத்தில் இடம்பெறும். சிங்கப்பூர் ஆகாயப் படையும் இந்தோனீசிய ஆகாயப் படையும் அதை இணைந்து நடத்துகின்றன.

இரண்டு வார பயிற்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த 100க்கும் அதிகமான வீரர்கள் உள்பட போர் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் என்று சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலாங் இன்டோபுரா பயிற்சி ஆகாயப் படைகளுக்கு இடையிலான நிபுணத்துவம், ஒத்துழைப்பு, இருதரப்பு நம்பிக்கை ஆகியவற்றை வலுப்படுத்த உதவுகிறது.

குறிப்புச் சொற்கள்