இளமைத் தோற்றத்தால் இணையவாசிகளை வியக்க வைத்த 45 வயது தாய்

இளமைத் தோற்றத்தால் இணையவாசிகளை வியக்க வைத்த 45 வயது தாய்

படம்: இன்ஸ்டகிராம்/குளோடியா சியா

30 Oct 2026 - 4:11 pm

1 mins read

தமது மகனின் தேசிய சேவை நிறைவு விழாவில் கலந்துகொண்டது குறித்த காணொளியைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்ட 45 வயது தாய் ஒருவர், தமது இளமையான தோற்றத்தால் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அவர்கள் இருவரும் பார்ப்பதற்கு அக்கா-தம்பி போல இருப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்தனர். குளோடியா சியா என்ற அந்தத் தாய், அக்டோபர் 20ஆம் தேதி, தமது 18 வயது மகனின் தேசிய சேவை நிறைவு விழா குறித்த காணொளியை இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார்.

அந்தக் காணொளியில், தமது மூத்த மகன் அடிப்படை ராணுவப் பயிற்சியை முடித்த பிறகு, மற்றவர்களிடம் அதிக மரியாதையுடனும் அக்கறையுடனும் நடந்துகொள்வதைக் கண்டு நன்றியுணர்வுடன் இருப்பதாக மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான அவர் தெரிவித்தார்.

“என் மகனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,’’ என்று அவர் அந்தக் காணொளியில் கூறினார்.

ஆனால், அந்த நிறைவு விழாவைவிட அவரது இளமையான தோற்றத்தின் மீதே இணையவாசிகளுக்கு அதிக ஆர்வம் இருந்தது.

வியாழக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, இன்ஸ்டகிராமில் சியாவின் காணொளியை 101,000க்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். கிட்டத்தட்ட 2,300 விருப்பக்குறிகளையும், ஏறக்குறைய 100 கருத்துகளையும் அது பெற்றுள்ளது.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்