வாகன உரிமைச் சான்றிதழ் காலாவதி ஆகும்போது, வாகன உரிமையாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வாகனத்திற்கான பதிவை அகற்றுவதை ஊக்குவிக்க புதிய அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
அதன்படி 10வது ஆண்டில் பதிவுகளை அகற்றும் வாகனங்களுக்குச் சிறப்புக் கூடுதல் பதிவுக் கட்டண (பிஏஆர்எஃப்) தள்ளுபடி கிடைக்கவுள்ளது. அவ்வகையில், பிஏஆர்எஃப் 45 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற இந்த அறிவிப்பை முன்னிட்டு, மேற்கூறிய, இந்தக் கூடுதல் பதிவுக் கட்டணத்திற்கான தள்ளுபடி வரம்பும் $60,000லிருந்து $30,000 ஆகக் குறைக்கப்படவுள்ளது.
வழக்கமான பெட்ரோல் கார்களுடன் ஒப்புநோக்க, மின்சார வாகனங்களால் ஏற்படும் மாசு குறைபாடு குறைவு.
மின்சார வாகனம் தற்போது மிகவும் பரவலாகக் காணப்படுவதாகச் சுட்டிய பிரதமர், தொடர்ந்து பேசினார்.
அதன்மூலம் சிறப்புக் கூடுதல் பதிவுக் கட்டணம் மூலம் வாகன உரிமையாளர்கள் முன்கூட்டியே வாகனங்களுக்கான உரிமைப் பதிவை அகற்றுவதற்கான தேவை குறைந்துள்ளது. எனவே, இந்த ‘பிஏஆர்எஃப்’ தள்ளுபடி 45 விழுக்காட்டுப் புள்ளிகள் அளவு குறைக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார் திரு வோங்.

