சூதாட்டப் பழக்கம் உடைய 38 வயது டோ வீ லியோங், மின் சிகரெட் தொடர்பான பொருள்களைச் விற்பனை செய்யும் சட்டவிரோத கும்பலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபருக்காக உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுத்ததாகக் கூறப்பட்டது.
இக்குற்றத்திற்காக அவருக்கு 10 மாதச் சிறைத் தண்டனையும் $14,000 அபராதமும் வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்த தவறினால் டோ கூடுதலாக 28 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.
டோவின் கிட்டத்தட்ட $80,000 கடனை அடைக்க 33 வயது சுவா வீ மிங் முன்வந்ததாகவும் அதனால், இந்த உதவியை டோ அவருக்குப் புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம், அந்தக் கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவ்விடத்திலிருந்து $5.2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மின் சிகரெட் தொடர்பான பொருள்களைக் கைப்பற்றினர்.
அவற்றில் 156,000க்கும் மேற்பட்ட மின் சிகரெட் சாதனங்களும் 252,000 க்கும் மேற்பட்ட பாலியல் தொடர்பான பொருள்களும் இருந்ததாகச் சொல்லப்பட்டது.
மின் சிகரெட் தொடர்பான பொருள்களைச் சேமிக்க கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுக்க உதவியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டை டோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.