தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிச் சம்பவங்களில் $5.55 மில்லியன் இழப்பு; 266 பேரிடம் விசாரணை

2 mins read
a3ca3548-7636-4f40-a120-38d9443d209b
விசாரணை வளையத்திற்குள் 173 ஆடவர்களும் 93 பெண்களும் உள்ளனர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடி, கடன் முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 266 பேரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் 16 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

5.55 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் இடம்பெற்ற 1,011க்கும் மேற்பட்ட மோசடிகளில் அவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாக வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 1) காவல்துறை தெரிவித்தது.

மின்வணிகம், முதலீடு, வேலை, இணையக் காதல், போன்ற மோசடிகளில் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை வளையத்திற்குள் 173 ஆடவர்களும் 93 பெண்களும் உள்ளனர்.

அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை ஏழு காவல்துறைப் பிரிவு அதிகாரிகளும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது அவர்கள் பிடிபட்டனர். 

 கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றங்களிலும் கடன் முதலை நடவடிக்கைகளிலும் உரிமம் இன்றி பணம் செலுத்தும் சேவைகள் வழங்கியதிலும் அவர்களுக்குப் பங்கிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

மோசடிகளில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுவரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுவரை சிறை அல்லது $500,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

உரிமம் இன்றி பணம் செலுத்தும் சேவைகள் வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மூன்று ஆண்டுவரை சிறை அல்லது $125,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

“மோசடிகளில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும்,” என்று காவல்துறை எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்