ஸ்டாம்ஃபர்ட் கேட்டரிங் சர்விசஸ் நிறுவனம் தயாரித்த உணவைச் சாப்பிட்ட 51 பேர் நோய்வாய்ப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அக்டோபர் 12ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் உரிமம் அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதிப்படைந்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் விசாரணை நடத்தி வருகின்றன.
நோய்வாய்ப்பட்டவர்களில் சிலர் வெளிநோயாளி சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
மற்றவர்கள் மருத்துவரை நாடாமல் தாங்களாக மருந்து உட்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் பாதிப்படைந்த யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

