சிங்கப்பூரில் தகவல் அனுப்பும் செயலிகள்வழி போதைப்பொருள்களை விநியோகம் செய்வதாக சந்தேகத்தின்பேரில் 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தீவு முழுவதும் தொடங்கிய சோதனைகள் மொத்தம் 9 நாள்கள் நீடித்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவா சூ காங், அங் மோ கியோ, புக்கிட் பஞ்சாங், மார்சிலிங், நொவினா ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனைகள் நடத்தினர்.
சோதனையின்போது 9,529 கிராம் கஞ்சா, 916 கிராம் 'ஐஸ்' என 11 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 560,000 வெள்ளி என்று அதிகாரிகள் கூறினர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

