விளக்குக் கம்பம் மீது மோதிய லாரி; 6 பேர் மருத்துவமனையில்

1 mins read
28137757-06e0-453e-9ffd-4fd0ebce57cf
படம்: SGRV/FACEBOOK -

புவாங்கோக் கிரீன் பகுதியில் லாரி ஒன்று நடைபாதை மேட்டில் ஏறி விளக்குக் கம்பம் மீது மோதியுள்ளது.

சம்பவம் சனிக்கிழமை (ஏப்ரல் 15) மாலை நடந்தது.

சம்பவம் குறித்து மாலை 6:30 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் வந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாரியில் இருந்த 6 பேர் செங்காங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சுயநினைவுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

33 வயது லாரி ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.

காவல்துறை விசாரணைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்