ஐஜூஸ் பழச்சாறு இயந்திரத்தில் இருந்த உறிஞ்சுகுழலை நக்கியதைத் தானே காணொளியில் பதிவிட்ட பதின்ம வயது ஆடவருக்கு வியாழக்கிழமை (ஜூலை 30) 600 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
டிடியே கஸ்பார்ட் ஓவன் மெக்ஸ்மிலன் என்ற 19 வயது ஆடவர் பொது மக்களுக்குத் தொந்தரவு இழைத்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

