தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாலான் புசாரில் கலவரத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது

1 mins read
be632a0f-078d-4104-a8b1-c64261cb86af
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜாலான் புசாரில் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களின் வயது 23க்கும் 49க்கும் இடைப்பட்டது.

திங்கள்கிழமை பின்னிரவு 12:50 மணிக்கு ஜாலான் புசாரில் இரு குழுக்கள் சண்டையிட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருபிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கேமராக்களை வைத்து சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சண்டையில் 29 வயது ஆடவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

5 ஆடவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, குற்றம் நிரூபணமானால் அவர்களுக்கு 7ஆண்டுகள் வரையிலான சிறை, பிரம்படி விதிக்கப்படும்.

இருவர் விசாரணைக்கு உதவிவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்