ஃபேர்பிரைசில் வாடிக்கையாளர்கள் ஒரே ரசீதில் $100க்குப் பொருள்கள் வாங்கினால் $8 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கடைகளிலும் ஜனவரி 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
ஒருமுறை பொருள்வாங்கும்போது ஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு பற்றுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் ஜனவரி 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனப் புத்தாண்டுக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செலவுகளைச் சமாளிக்க உதவும் நோக்கில் வழங்கப்படும் இந்தப் பற்றுச்சீட்டுகளை ஜனவரி 24 முதல் 28ஆம் தேதி வரை ஃபேர்பிரைஸ் கடைகளில் பொருள் வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் உள்ள அனைவரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குத் தேவையான பொருள்களை வாங்க உதவுவது இதன் நோக்கம் என்று குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா கூறினார்.
ஃபேர்பிரைஸ் குழுமம் இந்த ஆண்டு (2025) தொடங்கியதிலிருந்து பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
முன்னதாக, ஜனவரி 3 முதல் 12ஆம் தேதி வரை, ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திப் பொருள்கள் வாங்கும் ஒவ்வொரு $60க்கும் $6 பற்றுச்சீட்டை அது வழங்கியது.
பின்னர், சீனப் புத்தாண்டுக் காலம் முடியும் வரை, கடலுணவுப் பொருள்கள், பன்றி இறைச்சி, காய்கறி போன்றவற்றின் விலையில் மாற்றமில்லை என்று அது அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் மாதத் தொடக்கம் வரை, சமூக சுகாதார உதவித் திட்டத்தின் (CHAS) நீல, ஆரஞ்சு வண்ண அட்டைகளை வைத்திருப்போருக்குக் குறிப்பிட்ட வார நாள்களில் ஆறு விழுக்காட்டு விலைக்கழிவையும் ஃபேர்பிரைஸ் வழங்குகிறது. அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை ‘மாண்டரின் ஆரஞ்சு’ போன்ற பண்டிகைக்காலப் பொருள்களை வாங்குவதற்கும் சலுகைகளை அது வழங்குகிறது.