போதைப்பொருள் தொடர்பில் 81 சந்தேக நபர்கள் கைது

போதைப்பொருள் தொடர்பில் 81 சந்தேக நபர்கள் கைது

1 mins read
bbfb2998-232b-48f4-9c30-9e768365a5ef
படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -

சிங்கப்பூர் முழுவதும் அதிகாரிகள் நடத்திய அமலாக்க சோதனையில் 81 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 நாள்கள் நடத்தப்பட்ட சோதனையில் சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட 60,000 வெள்ளி போதைப்பொருள்கள் சிக்கின.

புக்கிட் பாத்தோக், ஹவ்காங், தெம்பனிஸ், யீ‌ஷூன் போன்ற வட்டாரங்களில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சோதனையின்போது கிட்டத்தட்ட 750 கிராம் போதைப்பொருளும், 57 போதை மாத்திரைகளும் பிடிபட்டன.

செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) காலை 61 வயது ஆடவர் தெம்பனிஸ் ஸ்திரீட் 43 -இல் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அப்போது ஆடவரிடம் 496 கிராம் போதைமிகு அபின், 42 கிராம் ஐஸ் வகை போதைப்பொருள்கள் இருந்தன.

ஆடவர் அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்காததால் அதிகாரிகள் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூரில் 15 கிராமுக்கு மேலாக போதைமிகு அபின் கடத்தினால் அவர்களுக்கு மரண தண்டனை கட்டாயம்.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்சோதனைசிங்கப்பூர்கைது