உண்மையான துப்பாக்கி போன்ற பொம்மைத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்தவருக்கு 9 நாள் சிறை

2 mins read
731b78f0-6c0d-48b5-84cd-67229f66fedd
உண்மையான துப்பாக்கி போன்ற பொம்மைத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்த லியு ஹுயிஜியான்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உண்மையான துப்பாக்கி போன்ற பொம்மைத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்த ஆடவர் ஒருவருக்கு நவம்பர் 15ஆம் தேதி ஒன்பது நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

லியு ஹுயிஜியான் எனும் அந்த ஆடவரின் வீட்டில் காவல்துறை இரண்டு முறை சோதனை நடத்தி, உண்மையான துப்பாக்கி போன்ற 150 பொம்மைத் துப்பாக்கிகளையும் அதன் பாகங்களையும் பறிமுதல் செய்தனர்.

43 நாள் விசாரணைக்குப் பிறகு, 44 வயதான அந்தச் சிங்கப்பூரர், நாட்டிற்குக்குள் குறைந்தது ஒரு பொம்மைத் துப்பாக்கியையாவது சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

பொம்மை துப்பாக்கிகளின் மாதிரிகள் சுகாதார அறிவியல் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை ஸ்பிரிங் அல்லது ஜெல், ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குண்டுகளைச் சுடுவதற்கு மின்கலம் மூலம் இயக்கப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டது.

முந்தைய விசாரணையின்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சியா வென்ஜி, மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி-ஷானாஸிடம், பிளாஸ்டிக் குண்டுகளைச் சுடும் பொம்மைத் துப்பாக்கிகளில் குறைந்தபட்சம் ஒன்று, கண்ணில் காயங்களை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருந்தது என்று ஆணையம் கண்டுபிடித்தது என்று கூறினார்.

சீனாவை தளமாகக் கொண்ட சில்லறை விற்பனை தளமான Taobao மூலம் தான் 50க்கு மேற்பட்ட விளையாட்டுத் துப்பாக்கிகளை வாங்கியதாகவும், அவை ஒரு தளவாட நிறுவனம் மூலம் தனது சிங்கப்பூர் வீட்டிற்கு விநியோகம் செய்யப்பட்டதாகவும் காவல்துறை அறிக்கையில் லியு கூறியிருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

காவல்துறை ஆணையாளரின் அனுமதியின்றி லியு, விளையாட்டுத் துப்பாக்கிகளையும் அதன் பாகங்களையும் இணையத்தில் கேரொசல் விற்பனைத் தளம் மூலமாக விற்றதாகவும் வழக்கறிஞர் சியா விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்