தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தேசிய சுற்றுப்புற அமைப்பின் திட்டத்தால் கிடைத்த நற்பலன் 

மறுசுழற்சி செய்யப்பட்டு மறுபயன்பாட்டுக்கு வரும் 90% குளிர்சாதனப் பெட்டிகள்

2 mins read
2a3128e8-d362-438d-b603-57aacc9a1a99
குளிரூட்டும் பெட்டிகள் மறுசுழற்சி செய்வது மிகவும் முக்கியமானது; ஏனெனில், அவற்றில் முறையாக மீட்டெடுக்கப்படாவிட்டால் கணிசமான அளவில் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் போன்ற குளிர்பதனப் பயனீட்டு பொருட்கள் உள்ளன - படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் 2021ஆம் ஆண்டு தொடங்கிய திட்டத்தின்கீழ், பல்லாயிரக்கணக்கான குளிர்சாதனப் பெட்டிகள்  மறுசுழற்சி செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கை ஒவ்வொரு மாதமும் ‘கெய்ன் சிட்டி’யின் சுங்கை காடுட் பேரங்காடியில் நடைபெறுகிறது.

“குளிரூட்டும் பெட்டிகள்  மறுசுழற்சி செய்வது மிகவும் முக்கியமானது;  ஏனெனில், அவை முறையாக மீட்டெடுக்கப்படாவிட்டால் கணிசமான அளவில் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள்  போன்ற குளிர்பதனப் பயனீட்டு  பொருட்கள் உள்ளன,” என்று கூறினார் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் மன்றத்தின் பேச்சாளர். 

“புவி வெப்பமடைதலை ஏற்படுத்துவதில் கரியமில வாயுவைக் காட்டிலும் ‘எச்எஃப்சி’ ஆயிரமடங்கு அதிக வலிமை வாய்ந்தவை,” என்றும் அவர் சொன்னார்.

உற்பத்தியாளர்களின் விரிவடைந்த பொறுப்புகள் எனக் குறிப்பிடப்படும் (The Extended Producer Responsibility (EPR)) இந்த முறை, மின்-கழிவுகளை சரியாகக் கையாள்வது, சேகரிப்பது உள்ளிட்ட ஒருங்கிணைந்த மின்-கழிவுகள் மேலாண்மை பற்றியது. 

குளிர்சாதன மறுபயனீடு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிங்கப்பூரின் இரண்டு இடங்களில் ஒன்று கெயின் சிட்டி. மற்றொன்று துவாஸில் உள்ள ‘அல்பா மின் கழிவுகள்’ இடவசதி.

தேசிய சுற்றுசூழல் அமைப்பின் அறிக்கையின்படி சிங்கப்பூர் ஆண்டுதோறும் சுமார் 60,000 டன் மின்னணுக்  கழிவுகளை உருவாக்குகிறது. இது, சிங்கப்பூரில் ஒரு நபர் 73 கைப்பேசிகளை தூக்கியெறிவதற்கான அளவுக்கு ஈடானது. அதில் 6 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

இதுகுறித்து கருத்துரைத்த ‘கெயின் சிட்டி‘ சந்தைப்படுத்துதல் பிரிவிற்கான இயக்குநர் திருவாட்டி கேண்டி காவ், “பயன்படுத்தப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் மறுசுழற்சிக்கு வரும்போது, ​​அவற்றைப் புதுப்பித்து மீண்டும் விற்பனை செய்ய முடியுமா என்று மதிப்பீடு செய்யப்படுகிறது,” என்று குறிப்பிட்டார்.

மறுசீரமைக்கப்பட்ட கருவிகள் கெயின் சிட்டியின் அதிகாரபூர்வ கெரோசல் தளத்தின்மூலம் மறுவிற்பனை செய்யப்படுவதாகவும், பெரும்பாலும் புதிய கருவிகளைவிட 80 விழுக்காடு குறைந்த விலையில் அவை விற்பனை செய்யப்படுவதாகவும் திருவாட்டி காவ், மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்