விபத்து ஏற்படுத்திய 94 வயது முதியவருக்கு $5,000 அபராதம்; ஓட்டுநர் உரிமம் ரத்து

விபத்து ஏற்படுத்திய 94 வயது முதியவருக்கு $5,000 அபராதம்; ஓட்டுநர் உரிமம் ரத்து

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Nov 2026 - 10:46 pm

1 mins read

அப்பர் தாம்சன் ரோட்டில் மோட்டார் சைக்கிளோட்டிமீது மோதிய 94 வயது கார் ஓட்டுநருக்கு $5,000 அபராதமும் ஐந்து ஆண்டுக்கு வாகனமோட்டத் தடையும் விதிக்கப்பட்டது.

கோ பூன் காங் என்ற அந்த முதியவர்மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி, மற்றவருக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை புதன்கிழமை (நவம்பர் 4) அவர் ஒப்புக்கொண்டார்.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9.45 மணியளவில், ஜாலான் அங்லோங் சந்திப்புக்கு அருகே அப்பர் தாம்சன் சாலையில் தமது காரை அவர் வலப்பக்கம் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்ட காணொளியில், கோவின் கார் மோதியதும் 58 வயது மோட்டார் சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டது தெரிந்தது.

பலத்த காயமடைந்த அவர் டான் டாக் செங் மருத்துவமனையில் 32 நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றார்; பின்னர் மலேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்திற்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஆயினும், 65 வயதும் அதற்கு மேற்பட்டோரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது சட்டப்படி கட்டாயமாகும்.

குறிப்புச் சொற்கள்