‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் 97வது நிகழ்ச்சி

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் 97வது நிகழ்ச்சி

1 mins read
146f05e3-de3e-43e2-ad86-2d161fb74b5b
‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் மாதாந்தர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள். - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்
Google News Preferred Icon

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் 97வது மாதாந்தர நிகழ்ச்சி சனிக்கிழமை (நவம்பர் 8) மாலை 6 மணிக்கு பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றது.

அறிமுகவுரையில் ‘ஞாலம்’ என்னும் தலைப்பில் பல்வேறு இலக்கியக் குறிப்புகள் பகிரப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்புரையில் ‘இலக்கியங்களில் நாட்டுப்புறவியல்’ என்னும் தலைப்பில் பண்ருட்டி, ஓய்வுபெற்ற BRC மேற்பார்வையாளர், கல்வித்துறையில் பணிபுரியும் மதிப்புறு முனைவர் அ. பாண்டு பல இலக்கண நூல்களிலிருந்து நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி பல மேற்கோள்களைக் காட்டினார்.

திருமதி உஷா சுப்பிரமணியன் சென்னையிலிருந்து இணையம்வழி இணைந்து ‘பன்முகப் பாவலன் பாரதி’ எனும் தலைப்பில் விரிவாக சிறப்புரையாற்றினார்.

மேலும், இந்நிகழ்ச்சி பொழில் பண்பலையில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்களும் தமிழ் ஆர்வலர்களும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்