தெம்பனிஸ் புளோக் 801இல் உள்ள காப்பிக் கடை ஒன்றில் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து கிட்டத்தட்ட 40 பேர் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் குறித்து தனக்கு இரவு 11 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காப்பிக்கடையின் சமையலறைப் பகுதியில் தீ ஏற்பட்டது. தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது.
யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அடுப்பிலிருந்த பாத்திரம் கடாய் ஒன்றிலிருந்து தீ தொடங்கியதாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின.
சமையலின்போது அடுப்பைக் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம் என்று குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களுக்கு நினைவூட்டியது. அதோடு, பயன்பாட்டில் இல்லாதபோது எரிவாயுவையும் மின்சாரத்தையும் அடைத்துவிடுமாறும் அது கேட்டுக்கொண்டது.