மத்திய விரைவுச்சாலையில், பிரேடலுக்கு வெளியேறும் பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 6) விபத்து நிகழ்ந்தது.
நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. அவற்றில் மூன்று கார்களும் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி ஒன்றும் அடங்கும்.
நான்கு பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இரவு 7.20 மணி அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மத்திய விரைவுச்சாலையில் ஜாலான் பஹாகியாவுக்கு வெளியேறும் இடத்துக்குப் பிறகு, சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் விபத்து நிகழ்ந்ததாக அது கூறியது.
விபத்துக்குள்ளான டாக்சி இரண்டு சிவப்பு கார்களுக்கு இடையே சிக்கி சேதமடைந்திருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
வெள்ளை நிற கார் ஒன்று அந்த இரண்டு சிவப்பு கார்களில் ஒன்றின்மீது இருந்தது.
நான்கு சாலைத் தடங்களைக் கொண்ட மத்திய விரைவுச்சாலையின் வலது பக்கத்தில் உள்ள இரண்டு தடங்கள் மூடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
குறைந்தது இரண்டு ஆம்புலன்சுகள் விபத்து நிகழ்ந்த இடத்தில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

