ஹவ்காங்கில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) கார் மோதியதை அடுத்து, 14 வயதுச் சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஏஷியாஒன்.காம் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 10.50 மணியளவில் சிராங்கூன் ரோட்டை நோக்கிச் செல்லும் ஹவ்காங் அவென்யூ 4ல் இவ்விபத்து நடந்தது.
பின்னிரவு 1 மணியளவில் சம்பவ இடத்தில், போக்குவரத்துக் காவல்துறையின் சுற்றுக்காவல் கார்களும் குற்றவியல் விசாரணைக்குப் பயன்படுத்தப்படும் வேனும் நின்றிருந்ததாக வழிப்போக்கர்கள் கூறினர்.
காரை ஓட்டிய 33 வயது ஆடவர் நடந்துசென்ற சிறுவனை மோதியதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் ஆடவர் விசாரணையில் உதவிவருவதாகவும் அது சொன்னது.
விசாரணை தொடர்கிறது.

