நியூ அப்பர் சாங்கி ரோட்டை நோக்கிச் செல்லும் சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நடந்த விபத்தை அடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஒரு வேன், இரு மோட்டார்சைக்கிள்கள், ஒரு சைக்கிள் என நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
52 வயதுச் சைக்கிளோட்டியும் 53 வயது மோட்டார்சைக்கிளோட்டியும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர். மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.