காத்தோங்கில் விபத்து: ஓட்டுநரும் பயணியும் மருத்துவமனையில்

காத்தோங்கில் விபத்து: ஓட்டுநரும் பயணியும் மருத்துவமனையில்

படங்கள்: எஸ்ஜிஆர்வி ஃபிரண்ட் மேன்/ஃபேஸ்புக்

07 Nov 2026 - 3:20 pm

1 mins read

காத்தோங்கில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றின் தடுப்புத் தூண்மீது வெள்ளிக்கிழமை (நவம்பர் 6), தமது கார் மோதியதன் தொடர்பில் 81 வயது மூதாட்டி ஒருவர் காவல்துறையின் விசாரணையில் உதவி வருகிறார்.

காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும், அன்றைய தினம் பிற்பகல் 3 மணி அளவில் ஹேக் ரோடு நோக்கிச்செல்லும் ஆம்பர் ரோட்டில் நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தன.

சுயநினைவுடன் இருந்த அந்த மூதாட்டியும் அவருடன் பயணம் செய்த 42 வயது நபரும் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

‘எஸ்ஜிஆர்வி ஃப்ரண்ட் மேன்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட விபத்து தொடர்பான புகைப்படங்களில், கார் ஒன்று நடைபாதைமீது ஏறி, அதன் முன்பகுதி தடுப்புத் தூணில் மோதி நசுங்கிய நிலையில் காணமுடிகிறது.

பயணிகள் கதவு திறந்த நிலையில், கார் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்கு மிக அருகில், பேருந்து நிறுத்தத்தில் ஒருசிலர் கூடியிருப்பதையும் பார்க்கமுடிகிறது. மற்றொரு புகைப்படத்தில், காரின் முன்னால் ஓர் அவசரக்காலப் படுக்கையும் அவசர மருத்துவ உதவி வாகனத்தின் பின்பகுதியும் தென்படுகின்றன.

அதற்கு அருகிலுள்ள பாதையில் வாகனங்கள் நெரிசலில் வரிசையாக நிற்பதும் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துமருத்துவமனைமுதியவர்