லோர்னி ரோட்டில் வேன் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்ததைத் தொடர்ந்து, மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
மூவர் காயமடைந்தனர்.
ஃபேஸ்புக்கில் சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடன்ட்.காம் பதிவேற்றம் செய்த படங்களில், ஆண்ட்ரூ ரோட்டுடனான சாலை சந்திப்புக்கு அருகில் வெள்ளி நிற வேன் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்ததைப் பார்க்கமுடிந்தது.
அன்றிரவு எடுக்கப்பட்ட மற்றொரு படத்தில் வேனின் முன்புறக் கண்ணாடியில் விறிசல் ஏற்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
ஓட்டுநர் பக்கச் சன்னலும் உடைந்திருந்தது. சாலையில் கண்ணாடித் துண்டுகள் சிதறிக்கிடந்தன.
வேனுக்கு அருகில் காவல்துறை வாகனம் ஒன்று இருந்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில், விபத்து குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை 5.35 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
ஆடம் ரோட்டை நோக்கிச் செல்லும் லோர்னி ரோட்டில் ஒரு வேனுக்கும் டாக்சிக்கும் இடையே விபத்து நடந்தது. சிறு காயகங்களுக்காக மூவர் பரிசோதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இருப்பினும், அவர்கள் மூவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர். மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக 36 வயது வேன் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல்முறை குற்றம் புரிவோருக்கு $2,000 முதல் $10,000 வரையிலான அபராதமோ, 12 மாதங்கள் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.