செங்காங் ஈஸ்ட் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, காயமடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு 13 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து, செங்காங் சமூக நடுவத்துக்கு வெளியே திங்கட்கிழமை (பிப்ரவரி 9) காலை 11.15 மணிக்கு நிகழ்ந்தது.
விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தோரில் 68 வயது பேருந்து ஓட்டுநரும் ஒருவர்.
கோ அஹேட் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஈரடுக்குப் பேருந்தின் முன்புறக் கண்ணாடி நொறுங்கியிருந்ததையும் அது இன்னொரு பேருந்துக்குப் பின்புறத்தில் இருப்பதையும் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வந்தன.
ஈரடுக்குப் பேருந்து முன்னால் இருந்த பேருந்தின் பின்பகுதி சேதமடைந்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அப்பேருந்து எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.

