6 சட்ட நிறுவனங்கள்மீது நடவடிக்கை: சட்ட அமைச்சு

$3 பில்லியன் பணமோசடி வழக்கு

6 சட்ட நிறுவனங்கள்மீது நடவடிக்கை: சட்ட அமைச்சு

2 mins read
fbbb628b-244a-4c3f-91ac-e20021666cd6
பணமோசடி தொடர்பில் தண்டிக்கப்பட்ட மூன்று சட்ட நிறுவனங்களின் பெயர்களைச் சட்ட அமைச்சு வெளியிட்டுள்ளது. - படம்: சட்ட அமைச்சின் இணையப்பக்கம்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி தொடர்பில் தண்டிக்கப்பட்ட மூன்று சட்ட நிறுவனங்களின் பெயர்களைச் சட்ட அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் சொத்து வாங்குவதன் தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதற்கு எதிரான விதிகளை மீறின.

சொத்து ஒப்பந்ததுடன் சம்பந்தப்பட்டதற்காகக் கண்டிக்கப்பட்ட மேலும் மூன்று சட்ட நிறுவனங்களின் பெயர்களையும் அமைச்சு வெளியிட்டது. உத்தேச ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்படி சட்டச் சங்கம் ஐந்து வழக்கறிஞர்களையும் குறிப்பிட்டது.

சொத்து ஒப்பந்தங்களில் ஈடுபட்ட 24 சட்ட நிறுவனங்களில் 13 நிறுவனங்கள்மீது சட்டச் சேவை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட அமைச்சு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) தெரிவித்தது. எஞ்சியுள்ள 11 நிறுவனங்கள்மீதான விசாரணை தொடர்கிறது.

ஆண்டனி சட்ட நிறுவனம் (ஏஎல்சி) $100,000 அபராதம் செலுத்தியது. நிறுவனத்தின் சொத்துரிமை மாற்றப் பிரிவின் தலைவர் திரு டான் ‌‌‌சாவ் சுவாங் சட்ட சங்கத்திடம் அனுப்பப்பட்டார்.

ஏஎல்சி நிறுவனம் 25 சொத்துகளை மாற்றிவிட 9 வாடிக்கையாளர்களுக்கு உதவியது. அந்தச் சொத்துகளின் மதிப்பு கிட்டத்தட்ட $139 மில்லியன்.

மூன்றாம் தரப்பினர் ஏன் அந்த சொத்துப் பரிமாற்றத்துக்கு நிதி வழங்குகின்றனர் என்பதையும் நிறுவனம் சரிபார்க்க தவறியது.

சந்தேகத்திற்குரிய பரிமாற்ற அறிக்கையைப் பதிவுசெய்த பிறகும் ஏஎல்சி நிறுவனம் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சொத்துகளை பரிவர்த்தனைகளை மேற்கொண்டது.

ஃபோட்ரிஸ் சட்ட நிறுவனம் (எஃப்எல்சி) $30,000 அபராதம் செலுத்தியது. நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் சட்டச் சங்கத்திடம் அனுப்பப்பட்டனர்.

அந்த நிறுவனம் 55 சொத்துகளை மாற்றிவிட 16 வாடிக்கையாளர்களுக்கு உதவியது. அந்தச் சொத்துகளின் மொத்த மதிப்பு $398.7 மில்லியன்.

லீகல் சொலியூ‌‌ஷன்ஸ் நிறுவனம் (எல்எஸ்) $70,000 அபராதம் செலுத்தியது.

எல்எஸ் நிறுவனம் $117 மில்லியன் மதிப்புள்ள 20 சொத்துகளை மாற்றிவிட 2 வாடிக்கையாளர்களுக்கு உதவியது.

குறிப்புச் சொற்கள்