தனியார் வீடுகளுக்கும் $400 பருவநிலைப் பற்றுச்சீட்டுகள்

1 mins read
நீடித்த நிலைத்தன்மையில் குடும்பங்களின் பங்கை அதிகரிக்கும் முயற்சி
5b988054-050c-4d40-896d-394dcc661ed4
எரிசக்தி, தண்ணீரைச் சேமிக்கும் பொருள்களை வாங்கப் பயன்படுத்தக்கூடிய பருவநிலைப் பற்றுச்சீட்டுகள், தனியார் வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கும் வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் பருவநிலைப் பற்றுச்சீட்டுகள், இனி தனியார் வீடுகளில் வசிக்கும் அனைத்து சிங்கப்பூரர்க் குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

அக்குடும்பங்கள், $400 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளைப் பெறும்.

மேலும், வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குக் கூடுதலாக $100 மதிப்புள்ள பருவநிலைப் பற்றுச்சீட்டுகள் கிடைக்கும். ஏற்கெனவே அவற்றுக்கு $300 பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளன.

பற்றுச்சீட்டுகளை ஏப்ரல் 15ஆம் தேதி முதல் go.gov.sg/cv-claim இணையத்தளம்வழி பெறலாம்.

இந்தப் பற்றுச்சீட்டுகளை, 150க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் 500 கடைகளில் டிசம்பர் 31, 2027 வரை பயன்படுத்தலாம்.

பருவநிலைக்குச் சாதகமான இல்லங்கள் திட்டத்தின்கீழ் (Climate Friendly Households Programme), இப்பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு, பருவநிலைப் பற்றுச்சீட்டுகளின் மதிப்பு $225லிருந்து $300ஆக அதிகரிக்கப்பட்டது. எரிசக்தி, தண்ணீரைச் சேமிக்கும் பொருள்களை வாங்க இப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்