செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆசிய நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு

செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆசிய நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு

2 mins read
c645b352-370e-4fdb-b6b0-d5d640a90fdd
(இடமிருந்து) கிரானைட் ஏஷியா நிறுவனத்தின் மூத்த நிர்வாகப் பங்குதாரர் ஃபூ ஜிசுன், டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி டான் சு ஷான், கிரானைட் ஏஷியா நிறுவனத்தின் மூத்த நிர்வாகப் பங்குதாரர் ஜென்னி லீ. - படம்: டிபிஎஸ் வங்கி

ஆசியாவில் உள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் கூடுதல் ஆதரவை வழங்கும் நோக்கில், டிபிஎஸ் வங்கியும் சொத்து முதலீட்டு நிறுவனமான கிரானைட் ஏஷியாவும் இணைந்து செயல்படவிருக்கின்றன.

தொடக்கமாக, இந்த வட்டாரத்திலுள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களுக்காக 110 மில்லியன் அமெரிக்க டாலர் (S$126.5 மில்லியன்) மதிப்பிலான நிதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டு நடவடிக்கை வளர்ந்து வரும் ஆசிய நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவி, நிறுவன இணைப்பு, கையகப்படுத்துதலுக்கான ஆலோசனை, மூலதனத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் போன்ற சேவைகளை வழங்க உதவும் என்று டிபிஎஸ் வங்கி திங்கட்கிழமை (பிப்ரவரி 23) தெரிவித்தது.

இந்தப் பங்காளித்துவம் மூன்று ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். இது, டிபிஎஸ் வங்கியின் முதலீட்டு வாடிக்கையாளர்கள் (wealth clients) வளர்ந்துவரும் நிறுவனங்கள், ‘ஐபிஓ’ எனப்படும் பங்குச்சந்தையில் முதல் முறையாகப் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் ஆகியவை குறித்த தகவல்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள உதவும்.

இது கிரானைட் ஏஷியா நிறுவனத்திற்குப் புதிய நிறுவனங்களுடன் இருக்கும் வலுவான தொடர்புகளையும், ஆசியாவின் புதுமையான நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதிலும் முதலீடு செய்வதிலும் அதன் சிறந்த அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்கிறது.

‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘கிராப்’, மின்வர்த்தக நிறுவனமான ‘சீ, ‘டென்சென்ட்’ போன்றவை செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களாகும்.

டிபிஎஸ் வங்கியும் கிரானைட் ஏஷியா நிறுவனமும் இணைந்து, ஆசியாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்வதற்கும் உருமாற்றம் பெறுவதற்கும் உதவும் வகையில் ஒரு தனியார் மூலதனத் திட்டத்தை உருவாக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, ‘பங்குகளைக் குறைக்காத மூலதனம்’ (Non-dilutive capital) என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிறுவனத் தலைவர்கள் தங்கள் நிறுவனத்தின் உரிமையை (Equity ownership) விட்டுக்கொடுக்காமலேயே நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும்.

குறிப்புச் சொற்கள்