தைப்பூசத்தை முன்னிட்டு பேருந்துச் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள்

தைப்பூசத்தை முன்னிட்டு பேருந்துச் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள்

1 mins read
dc9969bc-46a9-4a7c-8bc7-80781fd68797
தைப்பூச நாளின்போது பேருந்துச் சேவை எண் 64, 123, 139 ஆகிய மூன்று சேவைகள் ஒருசில நிறுத்தங்களில் சேவை வழங்கமாட்டா. - படம்: எஸ்பிஎஸ் டிரான்சிட்

பிப்ரவரி 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கிளமென்சியூ அவென்யூ ஆகிய சில சாலைகள் மூடப்படுகின்றன.

எனவே, ஒருசில பேருந்துச் சேவைகள் செல்லும் பாதை தற்காலிகமாக மாற்றப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேருந்துச் சேவை எண் 64, 123, 139 ஆகிய மூன்று சேவைகள் ஒருசில நிறுத்தங்களில் சேவை வழங்கமாட்டா.

கிளமென்சியூ அவென்யூ, ஆர்ச்சர்ட் சாலை ஆகிய பாதைகள் வழியாக ஜனவரி 31ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 7 மணியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதி பேருந்துச் சேவை நேரம் முடியும்வரை 64, 123, 139 ஆகிய பேருந்துகள் செல்லாது.

பிப்ரவரி 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கிளமென்சியூ அவென்யூ ஆகிய சில சாலைகள் மூடப்படுகின்றன.
பிப்ரவரி 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கிளமென்சியூ அவென்யூ ஆகிய சில சாலைகள் மூடப்படுகின்றன. - படம்: எஸ்பிஎஸ் டிரான்சிட்
குறிப்புச் சொற்கள்